மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா


மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா
x

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்துள்ளார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்துள்ளார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியான நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்யப்பட்ட நிலையில் தற்போது மாநகராட்சி மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை இந்திராணி அளித்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக வரும் 17 ஆம் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.

1 More update

Next Story