மதுரை மாநகராட்சி மேயர் கணவர் கைது: பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - நயினார் நாகேந்திரன்


மதுரை மாநகராட்சி மேயர் கணவர் கைது:  பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - நயினார் நாகேந்திரன்
x

திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக பாஜக ஓயாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மதுரை மாநகராட்சி மேயர் கணவரின் கைது பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருப்பது திமுக அரசின் ஊழல் முகத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

நமது தமிழக பாஜக முன்னெடுத்த மாபெரும் கண்டன போராட்டம் மற்றும் தொடர் அழுத்தத்தின் விளைவாக இந்த கைது சாத்தியமாகியுள்ள நிலையில் இது நமது தாமரை சொந்தங்களின் அரும்முயற்சிக்கு கிடைத்த வெற்றியே. ஆனால் மக்கள் நலனுக்கான நமது அறப்பணி இத்தோடு முடியப்போவதில்லை. மதுரை மாநகராட்சியின் வரி முறைகேட்டின் பின்னுள்ள அனைத்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டு, ஊழலில் ஊறித்திளைக்கும் திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக பாஜக ஓயாது! இது உறுதி. என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story