மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் இன்று 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும்' என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்பட்டு கூடுதலாக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' இவ்வாறு அவர் கூறினார்.