ஜப்பானில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து; 170 வீடுகள் எரிந்து நாசம் - ஒருவர் உயிரிழப்பு

தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 175 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
டோக்கியோ,
தெற்கு ஜப்பானின் சகானோசெகி மாகாணத்தில் உள்ள ஒயிட்டா கடற்கரை நகரத்தில், கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு மோசமான தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில், சுமார் 170 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 175 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம், ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் தண்ணீர் மற்றும் மணலை தூவி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






