தடையை மீறி உணவகங்களில் மயோனைஸ்? - உணவு பாதுகாப்புத்துறை எடுத்த முடிவு


தடையை மீறி உணவகங்களில் மயோனைஸ்? - உணவு பாதுகாப்புத்துறை எடுத்த முடிவு
x

ஓராண்டு தடை விதிக்கப்பட்டாலும் ஒருசில இடங்களில் இன்னும் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அசைவ உணவகங்களில், முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி 'மயோனைஸ்' தயாரிக்கப்படுகிறது. ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் 'மயோனைஸ்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், 'மயோனைஸ்'க்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டாலும் ஒருசில இடங்களில் இன்னும் மயோனைஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story