சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
திருச்சி,
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த 25-ந்தேதி சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காரில் செல்ல முயன்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து அமைச்சர் ரகுபதி நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






