சென்னையில் கூடுதலாக 7 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்': அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்


சென்னையில் கூடுதலாக 7 இடங்களில் முதல்வர் படைப்பகம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 4 Aug 2025 2:30 AM IST (Updated: 4 Aug 2025 2:30 AM IST)
t-max-icont-min-icon

ந்த ஆண்டுக்குள் மேலும் 15 படிப்பகங்களை உருவாக்கும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது

சென்னை,

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், திரு.வி.க.நகர் தொகுதியில் உள்ள ஓட்டேரி, சுப்புராயன் தெரு, பட்டாளம், பக்தவச்சலம் பூங்கா, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி, மங்களபுரம் ஆகிய 7 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டி இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் படைப்பக கட்டுமானப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆண்டுக்குள் மேலும் 15 படிப்பகங்களை உருவாக்கும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தற்போது வரை சென்னையில் 45 முதல்வர் படைப்பகங்களை உருவாக்கிய பெருமை முதல்-அமைச்சரையே சாரும். மேலும், வடசென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் பாரிமுனை பிரகாசம் சாலியில் மிகப்பெரிய நூலகம் உருவாக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story