தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலினுக்கு மனது இல்லை - எல்.முருகன்


தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலினுக்கு மனது இல்லை - எல்.முருகன்
x

மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்

கோவை,

கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது.

இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். என தெரிவித்தார் .

1 More update

Next Story