மு.க.ஸ்டாலின் வருகை: கள்ளக்குறிச்சி, தி.மலையில் டிரோன்கள் பறக்க தடை


மு.க.ஸ்டாலின் வருகை: கள்ளக்குறிச்சி, தி.மலையில் டிரோன்கள் பறக்க தடை
x

முதல்-அமைச்சர் வருகையையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று டிரோன் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பயணத்தை முடித்துவிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செல்கிறார். அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலும் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story