பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்


பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்
x

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் கமிஷனிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக நேற்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து, இதற்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தனர். 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு 'டார்ச் லைட்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story