'மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு' - திருமாவளவன்


மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு - திருமாவளவன்
x

பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அ.தி.மு.க. கூறியது அதிர்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு. முருக பக்தர்களின் மாநாடு நடந்திருந்தால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அந்த மாநாட்டில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றது அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணாவை விமர்சித்தாலும், பெரியாரை விமர்சித்தாலும் தேர்தல் ஆதாயம் கருதி பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அ.தி.மு.க. இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். அண்ணா, பெரியாரை விமர்சித்த பிறகும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கப் போகிறார்களா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டும்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story