மாதாந்திர பராமரிப்பு பணி: நாளை தென்காசியில் மின்தடை

சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை (12.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்றைய தினம் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story