மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசியில் சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசி
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்றைய தினம் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






