முருக பக்தர்கள் மாநாடு - பவன் கல்யாண் மதுரை வருகை


முருக பக்தர்கள் மாநாடு - பவன் கல்யாண் மதுரை வருகை
x
தினத்தந்தி 22 Jun 2025 1:04 PM IST (Updated: 22 Jun 2025 1:14 PM IST)
t-max-icont-min-icon

பவன் கல்யாண் புறப்பட்ட தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை நடக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை தினம்தோறும் ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். இதனிடையே, பவன் கல்யாண் புறப்பட்ட தனி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு பவன் கல்யாண் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டார். இந்த நிலையில், தற்போது பவன் கல்யாண் மதுரை வந்து சேர்ந்துள்ளார். தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பங்கேற்க உள்ளார். முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் பவன் கல்யாண் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

1 More update

Next Story