உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி - கமல்ஹாசன்


உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி - கமல்ஹாசன்
x

உதயநிதியின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். கமல்சாருக்கு என் அன்பும் நன்றியும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,

"நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story