மதன்பாப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம் - சீமான்

கோப்புப்படம்
நடிகர் மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா மதன்பாப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நடிகர், இசைக்கலைஞர், நிகழ்ச்சித்தொகுப்பாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டு, மக்களை மகிழ்வித்த ஐயா மதன் பாப் அவர்களது மறைவு தமிழ்க்கலையுலகுக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும். அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும், என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா மதன்பாப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






