நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவு - ராமதாஸ் இரங்கல்

இல.கணேசன் உடல்நலக் குறைவால் காலமான தகவலால் பெரிதும் துயறுற்றேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவரும், நண்பருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் காலமான தகவலால் பெரிதும் துயறுற்றேன். கட்சி, கொள்கை கடந்து அனைத்துத் தரப்பு மனிதர்களிடமும், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும்; அன்பு பாராட்டியவர்; நட்பு பேணியவர்; இல.கணேசன்.
பா.ஜ.க. கூட்டணி அரசில் பாட்டாளி மக்கள் கட்சி, மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, இல.கணேசன் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்தார். என்னுடன் மிகவும் நட்பு பாராட்டி வந்ததோடு, பா.ம.க. மீதும், பா.ம.க. தொண்டர்களிடத்தும் தனித்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
மணிப்பூர் கவர்னராக பொறுப்பில் இருந்த நிலையில், நாகாலாந்து கவர்னராகவும் கூடுதல் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றி வந்தார். அன்பிற்குரிய நண்பரை இழந்து என்னைப்போலவே, தவிப்பில் இருக்கும் அவருடைய நண்பர்கள்; பாஜக தொண்டர்கள்; உறவுகள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும்; அனுதாபத்தையும்; பா.ம.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






