குஜராத்: சோமநாதர் கோவில் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு


குஜராத்: சோமநாதர் கோவில் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Jan 2026 10:45 AM IST (Updated: 11 Jan 2026 6:05 PM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் சுற்றுப்பயணத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அகமதாபாத்,

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டத்தின் வெரவல் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் நேற்று சென்ற பிரதமர் மோடியை முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் வரவேற்றனர்.

பின்னர் அரசு மாளிகைக்கு சென்ற அவரை வழிநெடுகிலும் திரளான மக்கள் நின்று வரவேற்றனர்.பின்னர் சோம்நாத் கோவிலில் நடந்த ஓம்கார் மந்திரம் ஜெபிக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அத்துடன் கோவில் வளாகத்தில் நடந்த டிரோன் ஷோவையும் பார்வையிட்டார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் நடைபெறும் சோம்நாத் சுயமரியாதை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வாகனத்தில் யாத்திரை சென்ற பிரதமர் மோடியை அங்குள்ள மக்கள் வரவேற்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story