நெல்லை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்


நெல்லை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 2 Aug 2025 3:21 PM IST (Updated: 2 Aug 2025 3:52 PM IST)
t-max-icont-min-icon

இந்த தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நெல்லை ,

நெல்லை மாவட்டம் பிரான்சேரி பகுதியில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் கழிவுகள் குவிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று பிளாஸ்டிக் குடோனில் தீ ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் அதிகப்படியான புகை மூட்டம் அப்பகுதியில் சூழ்ந்தது.

இதனையடுத்து நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவியில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு படை வீரர்களும் வரவழைக்கபட்டுள்ளனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story