நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத ரெயில்வே கேட்


நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத ரெயில்வே கேட்
x

கோப்புப்படம் 

ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைகண்ட ரெயில் என்ஜின் டிரைவர், அந்த கேட் அருகே ரெயிலை நிறுத்தினார்.

நெல்லை,

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு நேற்று மாலை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் மாலை சுமார் 4.57 மணி அளவில் நாங்குநேரி ரெயில் நிலையத்தை கடந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் திசையன்விளை ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனால் ரெயில் தொடர்ந்து செல்வதற்கு சிக்னல் கிடைக்கவில்லை.

மேலும் ரெயில் வந்து கொண்டிருந்த போதிலும் ரெயில்வே கேட்டை கடந்து வாகனங்கள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. இதைக்கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், அந்த கேட் அருகே ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் கேட் கீப்பர் அறைக்கு சென்றார். அப்போது கேட் கீப்பருக்கு முறையான தகவல் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கேட் கீப்பர், அந்த கேட்டை மூடினார். பின்னர் ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story