காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய சப் கலெக்டர்கள் நியமனம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய சப் கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது:-
ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடித்ததை தொடர்ந்து எஸ்.மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப் கலெக்டராக (பயிற்சி) நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட சப் கலெக்டர்(பயிற்சி) ஜி.ரவிக்குமார் நிர்வாக பயிற்சியை முடித்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சப் கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.காஞ்சீபுரம் மாவட்ட சப் கலெக்டர் (பயிற்சி) என்.மிருநாளினி தனது நிர்வாக பயிற்சியை முடித்ததையடுத்து, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்' இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






