நீலகிரி: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு


நீலகிரி: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
x

மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே கல்லூரி மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.

இந்தநிலையில் திருமணம் பேசி முடிக்கப்பட்ட வாலிபரின் வீட்டு இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லூரி மாணவி குடும்பத்துடன் அங்கு சென்று 5 நாட்கள் தங்கி இருந்தார். இந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் கல்லூரி மாணவியை வலுக்காட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பெற்றோர், மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story