முதல் மந்திரியாக 10-வது முறையாக பதவியேற்ற நிதிஷ்குமார் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நிதிஷ்குமாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல் மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல் மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ் குமாருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"பீகாரின் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த புதிய தீர்ப்பு, மக்களின் நம்பிக்கையையும், வளர்ச்சிக்கான அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. நல்லாட்சி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை வழங்க அதிமுக சார்பாக வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






