வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை - திருமாவளவன்

பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கூறினார்.
சென்னை,
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
"தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது. சனாதன எதிர்ப்பில் அம்பேத்கருக்கு இணையாக பெரியார் இருந்தார். சீமானின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது. ஆபத்தான அரசியல் பேசுகிறார்.
வேங்கைவயலில் போராடும் விசிகவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ விசாரணை மீதும் நம்பிக்கை இல்லையென்றாலும் வேறுவழி தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை, நீதிமன்றமும், தமிழக அரசும் ஏற்கக் கூடாது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.