தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 3-வது நாள் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த உள்ளதை தடுக்க வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் எந்த வகையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது. நீர், நிலம் என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் என உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி இல்லை என்று கூறினார்.
Related Tags :
Next Story






