‘தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை’ - திருமாவளவன் ஆதங்கம்


‘தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை’ - திருமாவளவன் ஆதங்கம்
x

தமிழர் ஒருவர் பிரதமர் ஆகிவிட்டால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசியபோது அவர் கூறியதாவது;-

“இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆட்சி, அதிகாரம் என்பது தலைநகர் டெல்லியில்தான் உள்ளது. அதுதான் பிரதமர் பதவி. தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. தேசிய அரசியலை பேச வேண்டும், தேசிய அளவில் நாம் ஒரு சக்தியாக மாற வேண்டும், பிரதமர் இருக்கையை நோக்கி நாம் நகர வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

தமிழர் ஒருவர் பிரதமர் ஆகிவிட்டால், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் என்பது திரைக் கவர்ச்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. நல்ல படத்தை கொடுத்துவிட்டால் முதல்-அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றனர்.

நான் ‘அன்புத் தோழி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனை தொடர்ந்து ‘மின்சாரம்’ என்ற படத்தில் நடிப்பதற்காக கோவையை சேர்ந்த தயாரிப்பாளர் என்னை அணுகினார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் நடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். திரைப்படத்திலாவது ஒரு நாள் முதல்-அமைச்சராக இருக்கலாம் என்று ஆசைப்பட்டு அதற்கு நான் ஒப்புக்கொண்டு நடித்தேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story