‘மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை’ - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி

எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை என்றும், எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் டிசம்பர் 10-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






