ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்


ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ்
x

தி.மு.க. நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பி.ஆர்ஓ. நடராஜனின் நண்பர் என அண்ணாமலை கூறியிருந்தார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்றும் பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாக தி.மு.க. நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம், முன்னாள் பி.ஆர்.ஓ. நடராஜனின் நண்பர் என அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story