மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதில்


மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம்  கொடுத்த பதில்
x

ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் பாண்டியன் திமுவில் இணைந்தார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் பி.எச்.பாண்டி யன். இவருடைய மகன் மனோஜ் பாண்டியன்.அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்த மனோஜ் பாண்டியன் கட்சி சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் பிரிந்த போது, அவரது அணியில் மனோஜ் பாண்டியன் இணைந்து தீவிர ஆதரவாளராக செயலாற்றி வந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்து மனோஜ் பாண்டியன் வாதாடி வந்தார். இதற்கிடையே சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் கை கோர்த்ததால் மனோஜ் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு பிடிக்காமல் விலகி இருந்தார்.

இந்நிலையில் மனோஜ் பாண்டியன், தி.மு.க.வில் இணையப்போவதாக நேற்று காலை அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி அவர் நேற்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவரை அமைச்சர் சேகர்பாபு தனது காரில் அழைத்து வந்திருந்தார்.

அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவரது முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். திமுகவில் இணைந்த கையோடு தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

மனோஜ் பாண்டியன் திமுகவி இணைந்தது குறித்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், “ எல்லாம் நன்மைக்கே’ என்று பதிலளித்தார்.

1 More update

Next Story