சென்னையில் பைக் தடுப்பு சுவரில் மோதி விபத்து - ஒருவர் பலி

கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 43). இவர், நேற்று அண்ணாசாலையில் தனது பைக்கில் ஆயிரம்விளக்கு பகுதியில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி சென்றார். அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் கணேஷ் குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கணேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






