தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் - செல்வப்பெருந்தகை வாழ்த்து


தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் - செல்வப்பெருந்தகை வாழ்த்து
x

விருது பெற்ற அனைவருக்கும் செல்வப்பெருந்தகை பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கலை, அறிவியல், சமூகசேவை, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் தலைசிறந்து தங்களது பங்களிப்பை நல்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 131 பேருக்கு நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இரைப்பை - குடலியல் மருத்துவ நிபுணர் கே.ஆர். பழனிச்சாமிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இத்துறையில் மகத்தான சாதனைகள் படைத்து வருகிற அவருக்கு இவ்விருது மிகவும் பொருத்தமானதாகும். அவரது பணி மேலும் சிறக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story