சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு


சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
x

பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.

சென்னை

சென்னை நுங்கம்பாகத்தில் பணி நிரந்தரம் கோரி கடந்த 17 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் சிறப்பு மதிப்பெண்கள் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். முதல்-அமைச்சரின் அந்த உறுதிமொழியை ஏற்று பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்பான முதல்-அமைச்சரின் சட்டசபை அறிவிப்பு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியின்படி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்க கூட்டியக்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

1 More update

Next Story