வறண்டு கிடந்த பூமியை வளம் பெறச் செய்தவர் பென்னிகுவிக் - எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி


வறண்டு கிடந்த பூமியை வளம் பெறச் செய்தவர் பென்னிகுவிக் - எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
x

ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாளான இன்று அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை தீர்த்து, அவர்களை வளமாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்த பண்பாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்தநாளான இன்று அவர்தம் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்,

அந்நிய மண்ணில் பிறந்தாலும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் முல்லை பெரியாறு தந்து வறண்டு கிடந்த பூமியை வளம் பெறச் செய்த பென்னிகுவிக்கின் வெண்கல திருவுருவச்சிலையையும் மணிமண்டபத்தையும் அம்மா திறந்து வைத்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story