இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் - அமைச்சர் ரகுபதி பேட்டி


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் - அமைச்சர் ரகுபதி பேட்டி
x

கோப்புப்படம் 

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த இறப்பும் நேரவில்லை. எங்கு இறப்பு ஏற்பட்டாலும் அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story