சென்னையில் 18-ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில்18.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகாந்தபுரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டிசாலை, சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்காசாலை, பல்லவா கார்டன், வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம், ஆபீசர்ஸ் லேன், எஸ்என்பி.
திருவான்மியூர்: காவேரி அபார்ட்மென்ட் , எல்.பி. சாலை, பாஷ்யம் கட்டுமானம், இந்திரா நகர் 2வது தெரு, 1, 2 அவென்யூ, பிரதான சாலை, மற்றும் குறுக்கு தெரு, வெங்கடரத்தினம் நகர் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ.
புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், பை பாஸ் சாலை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






