பள்ளி வளாகங்களில் ஐ.டி.ஐ. அமைக்க திட்டம்; பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்.
பள்ளி வளாகங்களில் ஐ.டி.ஐ. அமைக்க திட்டம்; பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
Published on

சென்னை,

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனருடன் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) அமைக்க திட்டமிட்டு, அதற்கான செயல்முறை மற்றும் தகுதித் தணிக்கைகள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்திருக்கின்றனர்.அதன்படி, பள்ளி வளாகத்துக்குள் ஐ.டி.ஐ. அமைப்பதற்கு ஏதுவான பள்ளிகளை தேர்வு செய்ய சில விவரங்களை கல்வித் துறை, அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-ஒவ்வொரு பள்ளியிலும் ஐ.டி.ஐ. அமைக்க குறைந்தபட்சம் நிலத்தேவையாக 50 சென்ட் நிலம் இருக்கவேண்டும். தொழில் பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.தொழில் மண்டலங்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இந்த வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com