பா.ம.க. பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்

2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
Published on

செங்கல்பட்டு,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் தி.மு.க.வை வீழ்த்த உறுதியேற்பது, வன்னியர் இடதுக்கீடு தரவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோன்று, 2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

19 தீர்மானங்கள் விவரம்:

01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்டு வரை பதவியில் நீடிப்பார்கள்.

02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்.

03 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.

05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.

06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்.

07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.

09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.

12 : காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!

13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

15 : அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க. அரசுக்கு கண்டனம்.

17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com