பாமக எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அனுமதி

பாமக எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
நாளை சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பாமக எம்.எல்.ஏ அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






