தவெக தலைவர் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்


தவெக தலைவர் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்
x

பவுன்சர்கள் மனிதாபிமானம் இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்,

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவரும் நடிகருமான விஜய், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலினை அங்கிள் என்று கூறியும் விமர்சித்து இருந்தார். விஜய்யின் பேச்சு தரம் தாழ்ந்த வகையில் இருப்பதாகவும் வரும் தேர்தலில் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று திமுகவினர் பேசி வரும் நிலையில், விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், “ மதுரை மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை விஜய் தரக்குறைவாக பேசியதாகவும், பவுன்சர்கள் மனிதாபிமானம் இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story