அரசியல்வாதி விஜய் வலிமையானவர்: அருண்ராஜ் பேட்டி


அரசியல்வாதி விஜய் வலிமையானவர்: அருண்ராஜ் பேட்டி
x

விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என அருண்ராஜ் தெரிவித்தார்.

கோவை,

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக வெற்றிக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது,

தவெக கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும்.

நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிக வலிமையானவர். வேற எந்த கட்சிக்காவது காசு கொடுக்காம இவ்வளவு கூட்டம் வருமா? மக்கள் ஆதரவு யாருக்கு இருக்குனு தெரிந்துகொள்ளுங்கள்.

விஜய் சொல்வதை போல் நாங்கள் டீசண்ட் அரசியல் செய்கிறோம். நடிகருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரல.. அண்ணன் விஜய் இப்பொழுது நடிகர் இல்லை, முன்னாள் நடிகர். நடிப்பை விட்டுவிட்டு மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறார்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story