அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு


அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு
x
தினத்தந்தி 27 Dec 2025 3:11 PM IST (Updated: 27 Dec 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

மும்மொழிக் கொள்கையும் இல்லை, இரு மொழி கொள்கையும் கிடையாது, ஒரே மொழி கொள்கை தமிழ் மட்டும் தான் என சீமான் பேசி உள்ளார்.

சென்னை,

சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

உலகில் ஆகச்சிறந்த இலக்கியங்களை தாய்மொழியில் படிக்க வாய்ப்பை பெற்றவர்கள் தமிழ்ர்கள். மொழி அழிந்தால் கலை, இலங்கியம், பன்பாடு, அடையாளம், இனம், நாடு அழிந்து கொண்டிருக்கும் இக்கட்டான தருனம். நம் இனமும் பெருமை பெற்று வாழ வேண்டும். ஒரு இனம் எப்போது தனக்கென ஒரு நாட்டை பெறுகிறதோ அப்போது தான் அது முழுமை பெறும். உலகின் மிகச்சிறந்த எண்ணிக்கை கொண்ட இனங்கள் விடுதலை பெற்று பெருமையோடு வாழ்கின்றனர்.

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். இந்தப் போரின் இடையில் அவ்வப்போது வரும் அக்கப்போர். நம் மொழியை பேசி, வாக்கை பெற்றுக்கொண்டு, நம் இனத்தை அழிக்கும் வேலையை திராவிடர்கள் செய்கின்றனர். சின்ன பையன் சீமான், என்ன செய்துவிடுவான் என நினைத்தார்கள்.

மக்களிடம் மறதி இருக்கிறது அதனால் இந்த அடிமை நிலை இருக்கிறது. அடிமைப்பட்ட மக்களுக்கும், விடுதலைக்கும் உள்ள கடைசி கருவி ஆட்சி அதிகாரம் மட்டும்தான். காசுக்கு கூடும் கூட்டம்தான் பெரிய கட்சியா? திருடிய பணத்தை மக்களுக்கு பங்கு தருகிறார்கள்.

பெரியாரால் இங்கு மொழி, கலாச்சாரம் அழிந்தது, நாட்டை திருடர்கள் கூடாரமாக மாற்றியது. நாம் தமிழ்ர் கட்சி அங்கீகாரத்தை பெற்றது, அதனை அரியணை ஏற்றும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா?.

மும்மொழிக் கொள்கையும் இல்லை, இரு மொழி கொள்கையும் கிடையாது, ஒரே மொழி கொள்கை தமிழ் மட்டும் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story