பொங்கல் பண்டிகை: திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருப்பூர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக போத்தனூர்-சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. போத்தனூர்-சென்னை சென்டிரல் (வண்டி எண்.06194) சிறப்பு ரெயில் போத்தனூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.
சென்னை சென்டிரல்-போத்தனூர் (06193) சிறப்பு ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த தகவலை, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






