சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் 30.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சோழிங்கநல்லூர்: மேல்லேஸ், கே.ஜி.அபார்ட்மென்ட்,நூக்கம்பாளையம் சாலை, ஆர்.சி.ப்ளூசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை சாலை.
தாம்பரம்: கிருஷ்ணா நகர் 1 முதல் 8 தெரு, வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர், நேரு நகர் பகுதி சிட்லபாக்கம் 1வது மெயின் ரோடு, சந்தனா புவன் தெரு, பழைய ஹஸ்தனா தெரு ராமமூர்த்தி தெரு, ஆர்பி சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு, சங்கர்லால் ஜெயின் தெரு.
பல்லாவரம்: ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை, கட்லாஞ்சாவடி.
அம்பத்தூர்:ஜெ.ஜெ நகர் காவியா அப்பார்ட்மெண்ட், கிருஷ்ணா அபார்ட்மெண்ட், ஜெமினி அப்பார்ட்மெண்ட், ஸ்கூல் தெரு, மெட்ரோ கேஸ்டல் அபார்ட்மெண்ட், சாகரா அபார்ட்மெண்ட் ஆசீர்வாதம் நகர், வேணுகோபால் தெரு.
அடையாறு: பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை, 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3வது, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம், சுங்க காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






