தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா இன்று ஆலோசனை


தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா இன்று ஆலோசனை
x

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட, செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளர்கள ஆலோசனைக்கூட்டம் இன்று முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அ.தி.மு.க. , தே.மு.தி.க. இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. தங்கல் கூட்டணியில்தான் இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி. முனுசாமி கூறினார். அதேவேளை, யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story