ஜன.23-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

FILEPIC
பிரதமரின் கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி ஜன.23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் ஜன.23-ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,அதே நாளில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியுடன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பொதுக்கூட்டத்திடலை நயினார் நாகேந்திரன் இன்று மாலையில் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கெடுக்க செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுக்கிறது.






