தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு


தூத்துக்குடியில் தனியார் நிறுவன டிரைவர் திடீர் சாவு
x

தூத்துக்குடியில் உள்ள தனியார் பிளவர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், கம்பெனியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பழனி (வயது 58). இவர் தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பிளவர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15ம் தேதி காலை கம்பெனியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன பழனிக்கு, சண்முகவடிவு என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

1 More update

Next Story