சொத்துக் குவிப்பு வழக்கு; பெரியகருப்பன் விடுதலை

கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பெரிய கருப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் விடுவித்தது சிவங்கை நீதிமன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கு; பெரியகருப்பன் விடுதலை
Published on

சிவகங்கை,

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தனது குடும்பத்தினருடன் ஆஜரான அமைச்சர் பெரியகருப்பன் திரும்ப சென்றார். தற்போது கே.ஆர்.பெரியகருப்பன் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com