அமித்ஷாவிற்கு எதிராக சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை


அமித்ஷாவிற்கு எதிராக சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 10 April 2025 12:02 PM IST (Updated: 10 April 2025 12:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நாளை கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கரை இழிவாக பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகவும் இன்று 10.04.2025 இரவு தமிழ்நாடு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக எனது தலைமையில் சென்னை மைலாப்பூரில் நாளை 11.04.2025 கருப்புக்கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story