தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய், சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இதில் கம்பிகள் பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவை மூலம் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் லாரி போன்ற வாகனங்கள் வரும் போது கால்வாய் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே பெருமாள்புரம் பகுதியில் இதுபோன்று கம்பியில்லாமல் கட்டப்பட்ட கால்வாய் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனை 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற பணிகளால் மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் இந்த பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.






