வெனிசுலா வனவிலங்கு பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை சிங்கக்குட்டிகள்

உலகின் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் வெள்ளை சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வெனிசுலா வனவிலங்கு பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை சிங்கக்குட்டிகள்
Published on

கராகஸ்,

வெனிசுலா நாட்டின் மரகே டெலிகாஸ் பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பூங்காவில், புதிதாக 2 வெள்ளை சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன. இவை தென்ஆப்பிரிக்காவின் பாந்தெரா லியோ மெலனோசைட்டா வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை சிங்கக் குட்டிகளின் பெற்றோர்களான கமடகுவா மற்றும் செபாஸ்டியன், செக் குடியரசு வனவிலங்கு பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டவை ஆகும். புதிதாக பிறந்துள்ள வெள்ளை சிங்கக்குட்டிகளை மருத்துவர்கள் உதவியுடன் பூங்கா நிர்வாகம் கவனித்து வருகிறது.

வெள்ளை சிங்கங்கள் மிகவும் அரிய வகை உயிரினங்களாக கருதப்படுகின்றன. இவை உலகின் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மொத்தமாகவே சுமார் 200 வெள்ளை சிங்கங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com